ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

மியூகோமைகோசிஸ் சிகிச்சைக்கான மருந்து கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை

Posted On: 17 JUN 2021 1:41PM by PIB Chennai

மியூகோமைகோசிஸ் சிகிச்சைக்கான மருந்து கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கொவிட் பாதிப்புக்குப்பின் நோயாளிகளுக்கு மியூகோமைகோசிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை அளிக்க ஆம்போடெரிசின் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைப்பதால், சில மாநிலங்களில் இதன் தேவை அதிகரித்துள்ளது.

இந்த மருந்தின் உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதி செய்யவும், தேவைப்படும் மாநிலங்களுக்கு சமஅளவில் விநியோகிக்கவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் மூலம் 6.67 லட்சம் குப்பி ஆம்போடெரிசின் பி மருந்துகளை மத்திய அரசால் திரட்ட முடிந்தது. அதோடு, மியூகோமைகோசிஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின் டியாக்சிகோலேட், போசகோனசோல் மருந்துகளும் திரட்டப்பட்டுள்ளன

உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி மூலம் மியூகோமைகோசிஸ் சிகிச்சைக்கான மருந்துகள் கிடைப்பதை மருந்துகள் துறை தொடர்ந்து மதிப்பீடு செய்கிறது.

இந்த மருந்துகள் தயார் செய்யும் நிறுவனங்களை தொடர்பு கொண்டு, உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதுலிபோசோமல் அம்போடெரிசின் -பி உற்பத்தியை அதிகரிக்கும்படி தற்போதைய தயாரிப்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதுமியூகோமைகோசிஸ் சிகிச்சைக்கான மாற்று மருந்துகளின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் அதன் தயாரிப்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 62,000-மாக இருந்த ஆம்போடெரிசின் பி லிபோசோமல் ஊசியின் உற்பத்தி, மே மாதத்தில் 1.63 லட்சம் குப்பிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஜூன் மாதத்தில் 3.75 குப்பிகளாக உயர்த்தப்படும். இது குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படும் 5 மடங்கு உயர்வு.

மியூகோமைகோசிஸ் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளின் விநியோகம் தொடர்பாக தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மாநில அரசுகளுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து கண்காணித்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727866

----


(Release ID: 1727899) Visitor Counter : 250