நிதி அமைச்சகம்

2021-22ம் நிதியாண்டுக்கான நிகர நேரடி வரி வசூல் 100 சதவீத்துக்கு மேல் அதிகரிப்பு

Posted On: 16 JUN 2021 4:44PM by PIB Chennai

2021-22ம் நிதியாண்டுக்கான நிகர நேரடி வரி வசூல் 15.6.2021-ம் தேதி நிலவரப்படி ரூ. 1,85,871 கோடி. இது கடந்தாண்டு இதே காலத்தில் ரூ. 92,762 கோடியாக இருந்தது. இது 100.4 சதவீத அதிகரிப்பு. நிகர நேரடி வரி வசூலில், பெருநிறுவனங்கள் வரி (CIT) ரூ.74,356 கோடி (ரீபண்ட் போகமற்றும் பாதுகாப்பு பரிவர்த்தனை வரி (STT) உட்பட தனிநபர் வருமான வரி (PIT) ரூ.1,11,043 கோடி (ரீபண்ட் போக).

ரீபண்ட் வழங்குவதற்கு முன் 2021-22ம் நிதியாண்டுக்கான மொத்த நேரடி வரி வசூல் ரூ. 2,16,602 கோடி. கடந்தாண்டு இதே காலத்தில், இது ரூ. 1,37,825 கோடியாக இருந்தது. இதில் நிறுவன வரி ரூ.96,923 கோடி மற்றும் பாதுகாப்பு பரிவர்த்தனை வரி உட்பட தனிநபர் வருமான வரி ரூ.1.19,197 கோடியும் அடங்கும்.

மற்ற வரி வசூல்களில், அட்வான்ஸ் வரி ரூ.28,780 கோடி, பணியிடங்களில் வரி பிடித்தம்(டிடிஎஸ்) ரூ.1,56,824 கோடி, சுய மதிப்பீடு வரி ரூ.15,343 கோடி, வழக்கமான மதிப்பீட்டு வரி ரூ.14,079 கோடி, ஈவுத்தொகை வழங்கல் வரி ரூ.1086 கோடி மற்றும் இதர வரிகள் ரூ.491 கோடி ஆகியவை அடங்கும்.

புதிய நிதியாண்டின் ஆரம்ப மாதங்கள் சவாலாக இருந்தாலும், 2021-22ம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டில் அட்வான்ஸ் வரி வசூல் ரூ.28,780 கோடி. இது 146 சதவீத வளர்ச்சி. கடந்தாண்டு இதே காலத்தில் இது ரூ.11,714 கோடியாக இருந்தது.

அட்வான்ஸ் வரியில் பெருநிறுவன வரி ரூ.18,358 கோடி மற்றும் தனிநபர் வருமானவரி ரூ.10,422 கோடி ஆகியவை அடங்கும். வங்கிகளில் இருந்து தகவல் பெற்ற பின் இந்த தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021-22ம் நிதியாண்டில் ரூ.30,731 கோடி ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727563

 

-----(Release ID: 1727664) Visitor Counter : 204