சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

அனைத்து தேசிய நெடுஞ்சாலை திட்டங்களிலும், ட்ரோன் படப்பதிவை கட்டாயமாக்குகிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

Posted On: 16 JUN 2021 3:46PM by PIB Chennai

வெளிப்படைத்தன்மை, சமீபத்திய தொழில்நுட்பம் ஆகியவற்றை அதிகரிக்க, நெடுஞ்சாலை திட்ட பணிகளில், ட்ரோன்கள் மூலமான படப்பதிவை கட்டாயமாக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.

இதன்படி ஒப்பந்ததாரர்கள், கடந்த மாதம் மற்றும் தற்போது நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகளை  மேற்பார்வை ஆலோசகரின் குழு தலைவர் முன்னிலையில் ட்ரோன் மூலம் வீடியோ எடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய இணையதளத்தின்டேட்டா லேக்’-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேற்பார்வை ஆலாசகர்கள் இதை ஆய்வு செய்து தங்கள் கருத்துக்களை, டிஜிட்டல் மாதாந்திர அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும்

இந்த வீடியோக்களை நெடுஞ்சாலை திட்டத்தின் நேரடி ஆய்வின் போது, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளும் பார்த்து குறைகள் இருக்கிறதா என சரிபார்ப்பர்.

இந்த வீடியோக்கள்டேட்டா லேக்-ல் நிரந்தரமாக சேமிக்கப்படும் என்பதால், நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் பிரச்னைகளுக்கு தீர்வு காணும்போது, இந்த வீடியோவை ஆதாரமாக பயன்படுத்த முடியும்.

இதுத் தவிர, தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தை மேம்படுத்த, நெட்வொர்க் சர்வே வாகனம் (NSV) மூலம், சாலையின் நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த என்எஸ்வி வாகனத்தில், அதிக திறன் வாய்ந்த டிஜிட்டல் கேமிரா, லேசர் சாலை ஃபுரோபிலோ மீட்டர் உட்பட சாலைகளின் மேற்பரப்பை  அளவிடுவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727537

-------


(Release ID: 1727635) Visitor Counter : 268