சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தடுப்புமருந்துக்கு எதிரான மனநிலையை எதிர்கொள்வது குறித்து தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் தொடக்கத்திலேயே மாநிலங்களுக்கு விளக்கப்பட்டது

Posted On: 11 JUN 2021 2:51PM by PIB Chennai

இவ்வருடம் ஜனவரி 16 அன்று தடுப்பூசி வழங்கல் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்தே அதை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு இந்திய அரசு ஆதரவளித்து வருகிறது.

கிராமப்புறங்களில் உள்ள சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருவதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த போக்கு உலகெங்கும் இருக்கும் நிலையில், உள்ளூர் அளவில் இதை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அணுக வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டு, தடுப்பு மருந்துக்கு எதிரான மனநிலையை போக்குவதற்கு தேவையான தகவல்களை கொண்ட கொவிட்-19 தடுப்புமருந்து வழங்கல் தகவல் தொடர்பு யுக்திதடுப்பூசி வழங்கல் திட்டத்தின் தொடக்கத்திலேயே மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிடம் பகிரப்பட்டது.

மாநில அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கும் நோக்கில் தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில இயக்குநர்களிடமும் 2021 ஜனவரி 25 அன்றே இது பகிரப்பட்டது. உள்ளூர் தேவைக்கு ஏற்ப அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களும் இந்த யுக்தியை செயல்படுத்தி வருகின்றன.

அச்சு, சமூக மற்றும் மின்னணு உள்ளிட்ட அனைத்து ஊடகங்களுக்கும் தேவையான தகவல் தொடர்பு மாதிரிகள் தயார் செய்யப்பட்டு, மாநிலங்களிடம் பகிரப்பட்டுள்ளன.

தடுப்பு மருந்து பெற்றுக்கொள்வதில் உள்ள தயக்கத்தை போக்க அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நெருங்கி பணியாற்றி வருகிறது. பழங்குடியினரிடம் தடுப்பு மருந்து குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்துடனும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நெருங்கி பணியாற்றி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1726210

*****************



(Release ID: 1726271) Visitor Counter : 178