சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

ஹஜ் ஏற்பாடுகள் மற்றும் தடுப்பு மருந்து நிலவரம் குறித்து சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி ஆய்வு

Posted On: 10 JUN 2021 4:17PM by PIB Chennai

ஹஜ் பயணம் 2021 குறித்து மும்பையில் உள்ள ஹஜ் இல்லத்தில் ஆய்வு கூட்டமொன்றை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி இன்று நடத்தினார்.

எங்களது ஏற்பாடுகளை நாங்கள் செய்திருந்தாலும், சவுதி அரேபிய அரசின் முடிவின் படி நாங்கள் செயல்படுவோம். இரு நாடுகள் மற்றும் ஒட்டுமொத்த மனித குலத்தின் ஆரோக்கியமும், நல்வாழ்வுமே இந்தியாவின் முன்னுரிமை ஆகும்,” என்று கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு நக்வி தெரிவித்தார்.

தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நாடுதழுவிய பிரச்சாரம் ஒன்று சமூக மற்றும் கல்வி நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். “மாநில ஹஜ் குழுக்கள், வக்ப் வாரியங்கள் மற்றும் அவற்றை சார்ந்த அமைப்புகள், மத்திய வக்ப் குழு, மௌலானா ஆசாத் கல்வி நிறுவனம் மற்றும் இதர சமூக மற்றும் கல்வி நிறுவனங்கள் இதில் பங்கு வகிக்கும்,” என்று அவர் கூறினார்.

ஹஜ் ஏற்பாடுகள் குறித்து பேசிய அமைச்சர், தடுப்பு மருந்து வழங்கலின் தற்போதைய நிலவரம், இந்திய ஹஜ் கமிட்டி மற்றும் சவுதி அரேபிய சுகாதார துறையின் வழிகாட்டுதல்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் டாக்டர் அவுசஃப் சயீத், ஜெட்டாவில் உள்ள தூதர் திரு ஷாஹித் அலாம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறையின் மூத்த அதிகாரிகள் காணொலி மூலம் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி திரு எம் கான் மற்றும் இதர அலுவலர்களும் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725961

-----



(Release ID: 1726031) Visitor Counter : 242