அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

என்-95 முகக்கவசங்களுக்கு மாற்றாக மீண்டும் பயன்படுத்தும் கலப்பு தயாரிப்பு முகக்கவசங்கள் : இந்திய நிறுவனம் தயாரிப்பு

Posted On: 10 JUN 2021 9:10AM by PIB Chennai

என்-95 முகக்கவசங்களுக்கு மாற்றாக, துவைத்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் கலப்பு தயாரிப்பு முகக்கவசங்களை இந்திய நிறுவனம் உருவாக்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு நபரிடமிருந்து, மற்றவருக்கு தொற்று பரவுவதை குறைப்பதில் என்-95 முகக்கவசங்கள் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.

ஆனால் என்-95 முகக்கவசங்களை பயன்படுத்துவது பலருக்கு அசெளகரியமாக உள்ளது. இவற்றை பெரும்பாலும் துவைத்து மீண்டும் பயன்படுத்த முடியாது.

பரிசோதனா டெக்லாஜிஸ் என்ற நிறுவனம் எஸ்எச்ஜி-95, என்ற மீண்டும் பயன்படுத்தக் கூடிய கலப்பு தயாரிப்பு முகக்கவசத்தை கொவிட்-19 விரைவு நிதி திட்டத்தின் கீழ் உருவாக்க பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் (BIRAC) மற்றும் ஐகேபி நாலேஜ் பார்க் ஆகியவை உதவின.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த முகக்கவசங்கள் தூசு துகள்களை 90 சதவீத்துக்கும் அதிகமாகவும், பாக்டீரியா கிருமிகளை 99 சதவீதத்துக்கு அதிகமாகவும் வடிக்கட்டி தடுக்கிறது. எளிதாக சுவாசிக்கும் வகையில், செளகரியமாக காதில் மாட்டும் விதத்திலும் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பருத்தி துணியால் இந்த முகக்கவசம் தயாரிக்கப்படுவதால், இதை வெப்பமான சூழலிலும் பயன்படுத்த முடியும். இதில் உள்ள சிறப்பு வடிகட்டி அடுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது.

கையால் துவைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்த முகக்கவசத்தை ரூ.50 முதல் ரூ.75வரை விற்கலாம் என இந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இவற்றை மக்களால் எளிதில் வாங்க முடியும்

நாட்டின் தயாரிப்புகளை மேம்படுத்துவதில். பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை செயல்படுத்தபிராக்ஊக்குவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725826

 

-----

 (Release ID: 1725951) Visitor Counter : 220