பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 09 JUN 2021 3:45PM by PIB Chennai

நடப்பு நிதியாண்டின் காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில் 2021-22ம் ஆண்டில் காரீப் சந்தை பருவத்தின் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.

விவசாய பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு ஏற்ற விலையை உறுதி செய்வதற்காக காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

அதிகபட்ச உயர்வாக, எள்ளுக்கு கடந்த ஆண்டு குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குவின்டால் ஒன்றுக்கு ரூ.452 அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. துவரை மற்றும் உளுந்துக்கு ரூ.300 அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிலக்கடலைக்கு குவின்டால் ஒன்றுக்கு ரூ.275 அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பல்வகை பயிர்கள் பயிரிடுவதை ஊக்குவிப்பதற்காக, வெவ்வேறான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நெல் பொதுவான ரகத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவின்டால் ஒன்றுக்கு ரூ.1868-லிருந்து ரூ.1940 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் ரக நெல்லின் விலை ரூ.1960 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இது போல் சோளம், ராகி, பாசிபயறு, சோயாபீன்ஸ், சூரியகாந்தி விதை, பருத்தி உட்பட பல பயிர்களின் விலையும் ஓரளவு உயர்த்தப்பட்டுள்ளது.

இதோடு கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பிரதமரின் அன்னதத்தா ஆய்சன்ரக்ஸ்ஹன் திட்டமும், விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு ஏற்ற விலை வழங்கி உதவுகிறது. இதில் விலை ஆதரவு திட்டம்(PSS), விலை பற்றாக்குறை பண திட்டம்(PDPS), தனியார் கொள்முதல் மற்றும் இருப்பு திட்டம் (PPSS) ஆகியவை உள்ளன.

ஆர்எப்சிஎல் நிறுவனத்துக்கு புதிய முதலீட்டு கொள்கையை நீட்டிக்க ஒப்புதல்:

ராமகுண்டம் உரங்கள் மற்றும் ரசாயண நிறுவனத்திற்கு (RFCL), புதிய முதலீட்டு கொள்கையை திருத்தங்களுடன் நீட்டிக்க வேண்டும் என மத்திய ரசாயணத்துறை முன்மொழிந்தது. இதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆர்எப்சிஎல் நிறுவனம், தேசிய உர நிறுவனம் (NFL),  இந்திய பொறியாளர் நிறுவனம் (EIL), இந்திய உர கார்பரேஷன் நிறுவனம் (FCIL) ஆகியவை அடங்கிய கூட்டு முயற்சி நிறுவனமாகும்.  

இது எப்சிஐஎல் நிறுவனத்தின் முந்தைய ராமகுண்டம் ஆலையை புதுப்பிக்கிறது. இங்கு வேம்பு கலந்த யூரியா ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படும். ஆர்எப்சிஎல் யூரியா திட்டத்தின் மொத்த செலவு ரூ.6165.06 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725612

 

-----(Release ID: 1725674) Visitor Counter : 215