நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட குடும்ப அட்டை: சிறப்புத் திட்டத்தை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

Posted On: 03 JUN 2021 10:35AM by PIB Chennai

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனடையும் மக்களில், அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினரும், தற்போதைய கொவிட்-19 பெருந்தொற்று சூழலில் இந்தச் சட்டத்தால் பயனடைவதை உறுதி செய்வது அவசியமாகிறது. 

இதனைக் கருத்தில் கொண்டு, நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் வாழும் இத்தகையப் பிரிவினரைக் கண்டறிந்து, அவர்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட குடும்ப அட்டைகளை வழங்குவதற்கான சிறப்புத் திட்டத்தை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை, ஜுன் 2-ஆம் தேதி அறிவுறுத்தியுள்ளது.

தெருக்களில் வசிப்பவர்கள், குப்பைகளை சேகரிப்பவர்கள், தெருத்தெருவாகச் சென்று பொருட்களை விற்பவர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள் போன்றவர்களைக் கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனடையும் தனிநபர்களையும், குடும்பங்களையும் கண்டறிவது, குடும்ப அட்டைகளை விநியோகம் செய்வது ஆகிய பொறுப்புகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் விடப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723953

(Release ID: 1723953)



(Release ID: 1724016) Visitor Counter : 221