மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

கோபால் ரத்னா விருது: கால்நடை மற்றும் பால்வளத் துறைக்கான தேசிய விருதுகளை அறிமுகப்படுத்தினார் மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங்

Posted On: 01 JUN 2021 3:19PM by PIB Chennai

மற்றும் பால் வள அமைச்சர் திரு கிரிராஜ் சிங், காணொலி வாயிலான கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன்  முதல் நாள் உலக பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

கால்நடை மற்றும் பால்வளத் துறைக்கான தேசிய விருதுகளாக கோபால் ரத்னா விருதுகளை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.  i) சிறந்த பால்வள விவசாயி, ii), சிறந்த செயற்கைக் கருத்தரிப்புத் தொழிற்நுட்பனர், iii) சிறந்த பால்வள கூட்டுறவு/ பால் தயாரிக்கும் நிறுவனம்/ விவசாய உற்பத்தி நிறுவனம் ஆகிய மூன்று பிரிவுகளில் விருது வழங்கப்படும். இந்த விருதுக்குத் தகுதி வாய்ந்த விவசாயிகள்/ பால்வள கூட்டுறவு சங்கங்கள்/ செயற்கைக் கருத்தரிப்புத் தொழிற்நுட்பனர்கள் ஆகியோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான இணையதளம் ஜூலை 15-ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அமைச்சர் கூறினார். வெற்றியாளர்கள், அக்டோபர் 31-ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள்.

உமங் தளத்தில் மின்னணு கோபாலா செயலியை ஒருங்கிணைப்பதன் வாயிலாக உமங் தளத்தைப் பயன்படுத்தும் சுமார் 3.1 கோடி பேர் இந்த செயலியையும்   உபயோகப்படுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். வளர்ப்பினங்களை மேம்படுத்தும் ஓர் விரிவான சந்தையாகவும், விவசாயிகள் நேரடியாகப் பயன்படுத்தும் தகவல் களஞ்சியமாகவும் மின்னணு கோபாலா (e-GOPALA) செயலி விளங்கும்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உலகளவில், பால்வள நாடுகளுள் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும், 2019-20 ஆம் ஆண்டில் 198.4 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். தற்போதைய விலையின்படி 2018-19 ஆம் ஆண்டில் ரூ. 7.72 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருந்த பால் உற்பத்தியின் மதிப்பு, கோதுமை மற்றும் நெல் உற்பத்தியின் மதிப்பை விட அதிகமாகும்.

கடந்த ஆறு ஆண்டுகளில் பால் உற்பத்தி சராசரியாக வருடத்திற்கு 6.3% வளர்ச்சி அடைந்திருப்பதாகவும், உலகளவில் பால் உற்பத்தி, 1.5% வளர்ச்சியைப் பெற்றிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 2013-14 ஆம் ஆண்டில் 307 கிராமாக இருந்த நாள் ஒன்றில் ஒரு நபருக்குக் கிடைக்கும் பாலின் அளவு,  2019-20 ஆம் ஆண்டில் 406  கிராமாக உயர்ந்து, 32.24% அதிகரித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723395

*****************



(Release ID: 1723444) Visitor Counter : 206