சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொரோனா தொற்றுப்பரவல் தொடர்ந்து குறைந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாகப் பதிவு

இடுகை இடப்பட்ட நாள்: 30 MAY 2021 10:28AM by PIB Chennai

இந்தியாவில் கொரோனாத் தொற்று தொடர்ந்து கணிசமாகக் குறைந்து வருவதைக் காண முடிகிறது. நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 21,14,508 ஆக உள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 1,14,216 குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை ஏற்பட்ட மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுவோர் 7.58% ஆகும்.

நாட்டில் தொடர்ந்து 3 நாளாக கொரோனாத் தொற்று 2 லட்சத்திற்கும் குறைவான அளவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,65,553 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

17-வது நாளாக, அன்றாட புதிய பாதிப்புகளை விட, தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,76,309 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிதாக குணமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டோருக்குமான இடைவெளி 1,10,756 ஆக பதிவாகியுள்ளது.

நம் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,54,54,320 ஆக இன்று பதிவாகியுள்ளது. தொற்றிலிருந்து குணமடைபவர்களின் தேசிய வீதம் 91.25% ஆக உயர்ந்துள்ளது.

நாளொன்றில் மிக அதிகமாக கடந்த 24 மணி நேரத்தில் 20,63,839 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 34.31 கோடி பரிசோதனைகளும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி வீதம் 9.36 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதியின் விதம் 8.02 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. இந்த விழுக்காடு, 6 நாட்களாகத் தொடர்ந்து 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல் சாதனையாக, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 21.20 கோடியைக் கடந்துள்ளது.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி இதுவரை மொத்தம் 30,35,749 முகாம்களில் 21,20,66,614 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722827

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1722897) வருகையாளர் எண்ணிக்கை : 278
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam