உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

டிரோன் செயல்பாடுகளுக்காக தமிழ்நாட்டில் 7 இடங்கள் உட்பட 166 கூடுதல் பசுமை பகுதி இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

Posted On: 29 MAY 2021 4:01PM by PIB Chennai

அனுமதியின்றி செயல்படக்கூடாது என்ற விதியோடு டிரோன் செயல்பாடுகளுக்காக தமிழ்நாட்டில் 7 இடங்கள் உட்பட 166 கூடுதல் பசுமை பகுதி இடங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம்  ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் ஆளில்லாத குட்டி விமான போக்குவரத்துக்கு தேவையான வசதிகளை அளித்து அதை ஊக்கப்படுத்துவதற்காக இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இடங்களில் தரை அளவை விட 400 அடி உயரத்திற்கு டிரோன்களை இயக்கலாம்.

66 பசுமை பகுதி இடங்களுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ள நிலையில், ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள அனைத்து இடங்களின் பட்டியலை டிஜிட்டல் ஸ்கை தளத்தில் பார்க்கலாம் (https://digitalsky.dgca.gov.in).

விதிமுறைகளின் படி, ஆளில்லாத குட்டி விமானங்களை இயக்குவதற்கு முன், டிஜிட்டல் ஸ்கை தளம் மூலம் அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் டிரோன்களை இயக்கக் கூடாது. விமானப் போக்குவரத்து அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அனைத்து உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722683

 

-------(Release ID: 1722724) Visitor Counter : 227