சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பற்றிய சமீபத்திய தகவல்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
29 MAY 2021 9:17AM by PIB Chennai
1.73 லட்சம் அன்றாட பாதிப்புகளுடன், புதிய கொவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த 45 நாட்களில் மிகவும் குறைவாகப் பதிவாகியுள்ளது.
தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 22,28,724 ஆக சரிந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் 1,14,428 குறைந்துள்ளது.
2,51,78,011 பேர் நாடு முழுவதும் இதுவரை குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 2,84,601 நோயாளிகள் குணமடைந்தனர்.
16-வது நாளாக புதிதாக பாதிக்கப்படுபவர்களை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளது.
தொற்றிலிருந்து குணமடைபவர்களின் விகிதம் 90.80 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வாராந்திர தொற்று உறுதி விகிதம் 9.84 சதவீதமாக உள்ளது.
தினசரி தொற்று உறுதி விகிதம் 8.36 சதவீதமாக உள்ளது, தொடர்ந்து ஐந்து நாட்களாக 10 சதவீதத்திற்கும் கீழே உள்ளது.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ், 20.89 கோடி டோஸ்கள் இது வரை வழங்கப்பட்டுள்ளன.
பரிசோதனை திறன் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 34.1 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722598
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1722713)
வருகையாளர் எண்ணிக்கை : 183
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam