பாதுகாப்பு அமைச்சகம்
இராணுவத் தலைமை தளபதி வடகிழக்கில் பாதுகாப்பு சூழலையும், ஆயத்த நிலையையும் ஆய்வு செய்கிறார்
Posted On:
21 MAY 2021 8:03AM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேசத்தின் வடக்கு எல்லைகளில், பாதுகாப்பு சூழலையும், ஆயத்த நிலையையும் ஆய்வு செய்வதற்காக இந்திய இராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே 2021 மே 20 அன்று, இரண்டு நாள் பயணமாக நாகாலாந்தில் உள்ள திமாபூருக்கு சென்றுள்ளார்.
அவருக்கு, திமாபூரில் உள்ள தலைமையகத்தில், வடக்கு எல்லைகளில் நிலவும் நிலைமை மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலை குறித்து லெப்டினன்ட் ஜெனரல் ஜான்சன் மேத்யூவும், பிற அதிகாரிகளும், தளபதிகளும் விளக்கினார்.
சிறந்த விழிப்புணர்வுடன் இருப்பதாக அனைத்து அணிகளையும் பாராட்டிய இராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே, தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும், கட்டுப்பாட்டு எல்லையில் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இராணுவத் தலைவர் இன்று (2021 மே 21) புதுடெல்லிக்குத் திரும்புகிறார்.
***************
(Release ID: 1720578)
Visitor Counter : 194