ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பயன்படுத்தப்படும் ‘ஆம்போடெரிசின்-பி’ மருந்து பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும்: மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா உறுதி

Posted On: 20 MAY 2021 7:03PM by PIB Chennai

மியூகோமிகோசிஸ்எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்,  ‘ஆம்போடெரிசின்-பி’  மருந்தின் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும் என  மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை இணையமைச்சர்   திரு மன்சுக் மாண்டவியா இன்று தெரிவித்தார்.

இதை இந்தியாவில் உற்பத்தி செய்ய, இன்னும் 3 நாட்களுக்குள், மேலும் 5 மருந்து கம்பெனிகள் அனுமதி பெறும் என்றும்தற்போதுள்ள 6 மருந்து நிறுவனங்கள் இந்த மருந்தின் தயாரிப்பை ஏற்கனவே அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

6 லட்சம் ஆம்போடெரிசின்-பி’  குப்பிகளை இறக்குமதி செய்ய, இந்திய நிறுவனங்கள் ஆர்டர் கொடுத்துள்ளன என்றும்நிலைமையை சுமூகமாக்க, அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுக்கிறது என்றும் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720367

*****************


(Release ID: 1720427) Visitor Counter : 167