சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட சர்வதேச கொவிட் நிவாரணப் பொருட்களின் விவரம்
Posted On:
16 MAY 2021 4:34PM by PIB Chennai
கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், சர்வதேச நாடுகள் நன்கொடையாக அளிக்கும் மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் பெற்று வருகிறது. இவற்றை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு விரைவாக அனுப்பி வருகிறது.
2021 ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை, மொத்தம் 11058 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 13,496 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள், 7365 வென்டிலேட்டர்கள், சுமார் 5.3 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஆகியவை சாலை மார்க்கமாகவும், வான் வழியாகவும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கஜகஸ்தான், ஜப்பான், சுவிட்சர்லாந்து, கனடா, அமெரிக்கா, எகிப்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 14/15ம் தேதிகளில் பெறப்பட்ட முக்கிய பொருட்கள்:
* ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்: 100
* வென்டிலேட்டர்கள்: 500
* ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்: 300
* ரெம்டெசிவிர் குப்பிகள்: 40,000
* முகக்கவசங்கள் மற்றும் பிபிஇ உடைகள்.
இந்த நிவாரணப் பொருட்கள் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவற்றை மாநிலங்கள் /யூனி்யன் பிரதேசங்களுக்கு திறம்பட ஒதுக்கீடு செய்து, விநியோகிப்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விரிவாக கண்காணித்து வருகிறது. இவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக ஒரு பிரத்தியேக பிரிவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரிவு கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719105
*****************
(Release ID: 1719166)
Visitor Counter : 198