பிரதமர் அலுவலகம்

மாநில தினத்தை முன்னிட்டு சிக்கிம் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 16 MAY 2021 12:12PM by PIB Chennai

மாநில தினத்தை முன்னிட்டு சிக்கிம் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமான சுட்டுரைச் செய்தியில், “சிக்கிம் மக்களுக்கு மாநில தின நல்வாழ்த்துகள். வளமான இயற்கை அழகைப் பெற்றுள்ள இந்த மாநிலம், அன்பான மக்களின் வசிப்பிடமாகவும் திகழ்கிறது. இயற்கை வேளாண்மை போன்ற துறைகளில், சிக்கிம் மாநிலம் சிறந்த முன்னேற்றங்களை அடைந்துள்ளது. மாநிலத்தில் தொடர் வளர்ச்சிக்கும் அதன் குடிமக்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****************



(Release ID: 1719074) Visitor Counter : 172