பிரதமர் அலுவலகம்
திரு சுனில் ஜெயின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAY 2021 11:04PM by PIB Chennai
பிரபல இதழியலாளர் திரு சுனில் ஜெயினின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்த சுட்டுரைச் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“சுனில் ஜெயின், நீங்கள் மிக விரைவாக எங்களைவிட்டு பிரிந்துவிட்டீர்கள். பத்திரிக்கைகளில் உங்களது எழுத்துக்களை வாசிப்பதையும், பலதரப்பட்ட விஷயங்களில் உங்களது உண்மையான மற்றும் உள்ளார்ந்த கருத்துக்களைக் கேட்பதையும் நான் இழப்பேன். பல்வேறு எழுச்சியூட்டும் பணிகளை நீங்கள் விட்டுச் செல்கிறீர்கள். உங்களது மறைவினால் இதழியல் துறை இன்று மிகுந்த சோகத்தில் உள்ளது. உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1719064)
வருகையாளர் எண்ணிக்கை : 185
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam