பாதுகாப்பு அமைச்சகம்
கொவிட்-19 இரண்டாம் அலைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் செயல்படுகின்றனர் ராணுவ நர்சிங் அதிகாரிகள்
Posted On:
12 MAY 2021 2:45PM by PIB Chennai
கொவிட்-19 இரண்டாம் அலைக்கு எதிரான போராட்டத்தில், ராணுவ நர்சிங் சேவை பிரிவைச் சேர்ந்த நர்சிங் அதிகாரிகள் முன்னணியில் செயல்படுகின்றனர். இந்த அதிகாரிகள், ராணுவ மருத்துவமனைகள் பலவற்றில் கொவிட்-19 நோயாளிகளுக்கு மருத்துவ பராமரிப்பு அளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தில்லி, லக்னோ, அகமதாபாத், வாரணாசி மற்றும் பாட்னா போன்ற இடங்களில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) புதிதாக அமைத்துள்ள கொவிட்-19 மருத்துவமனைகளில் பணியமர்த்துவதற்காக 294 ராணுவ நர்சிங் அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் போர்க்கால நடவடிக்கைகள், மனிதாபிமான உதவிகள், மீட்புப் பணிகள், ஆம்புலன்ஸ் ரயில்கள், கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் உள்ள மருத்துமனைகள் போன்றவற்றில் பணியாற்றுவதில் ராணுவ நர்சிங் அதிகாரிகள் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளனர். நாட்டின் மிக உயரமான மலைப் பகுதிகளான லே, ரஜோரி, தோடா, கார்கில் மற்றும் தொலை தூர பகுதிகளில் ராணுவ வீரர்களின் நலனை காப்பதிலும் அவர்கள் திறம்பட பணியாற்றுகின்றனர்.
காங்கோ, சூடான், லெபனான் ஆகிய நாடுகளில் ஐ.நா அமைதிப்படையிலும், மற்றும் நட்பு அடிப்படையில் தஜிகிஸ்தானிலும் அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சிக்கலான பகுதிகளில் ராணுவ படையியினருக்கு விரிவான மருத்துவ பராமரிப்பை அவர்கள் மேற்கொண்டு ராணுவ அதிகாரிகளின் தயார்நிலையை அதிகரிக்கின்றனர். உயரமான போர்க்களம் முதல் இந்தியாவின் பாலைவனப் பகுதிவரை, இந்திய படையினருக்கு ராணுவ நர்சிங் அதிகாரிகள் சேவை செய்கின்றனர்.
சர்வதேச செவிலியர் தினம் ஒவ்வொரு ஆண்டும், மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2021 சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, தேவைப்படும் மக்களுக்கு தங்கள் சேவையை ராணுவ நர்சிங் அதிகாரிகள் விரிவுபடுத்தியுள்ளனர். ‘வழிநடத்தும் குரலாகவும், எதிர்கால சுகாதாரத்துக்கான தொலைநோக்காகவும், செவிலியர்கள் திகழ்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717918
------
(Release ID: 1717953)
Visitor Counter : 220