சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனா தொற்றின் வகையான பி.1.617 என்பதுடன் “இந்திய வகை” என்ற சொல்லை உலக சுகாதார அமைப்பு பயன்படுத்தவில்லை

Posted On: 12 MAY 2021 12:57PM by PIB Chennai

புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றான பி.1.617,  சர்வதேச அளவில் கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்ததை ஏராளமான ஊடகங்கள் செய்தி அறிக்கையாக வெளியிட்டிருந்தன. ஒரு சில கட்டுரைகள், பி.1.617 என்ற கொரோனா தொற்று வகையை, “இந்திய வகை என்று குறிப்பிட்டிருந்தன.

இது போன்ற செய்தி அறிக்கைகள், எந்த ஆதாரமும் இல்லாதவை.

தனது 32 பக்க ஆவணத்தில் உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொற்றின் ஒருவகையான பி.1.617 என்பதுடன்இந்திய வகை என்ற சொற்களை எங்கும் பயன்படுத்தவில்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.

இது தொடர்பான அறிக்கையின் எந்த ஒரு இடத்திலும்இந்திய என்ற சொல் குறிப்பிடப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717876

-----



(Release ID: 1717935) Visitor Counter : 308