நிதி அமைச்சகம்
மத்திய அரசின் செலவினங்களில் கொவிட்- 19 தடுப்பூசி இடம் பெறவில்லை என்பது உண்மையல்ல: நிதியமைச்சகம் விளக்கம்
Posted On:
10 MAY 2021 1:51PM by PIB Chennai
“மோடி அரசின் தடுப்பூசி நிதியின் உண்மை நிலவரம்:
மாநிலங்களுக்கு ரூ. 35,000 கோடி, மத்திய அரசுக்கு பூஜ்யம்” என்ற தலைப்பில் 'தி பிரிண்ட்’ ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்திக் கட்டுரை சம்பந்தமான விளக்கம்.
மத்திய அரசின் செலவினங்களில் கொவிட்- 19 தடுப்பூசி இடம் பெறவில்லை என்பது உண்மையல்ல. மானியக் கோரிக்கைகள் எண் 40ன் கீழ் ‘மாநிலங்களுக்கான மாற்றல்' என்ற தலைப்பில் ரூ. 35,000 கோடி இடம்பெற்றுள்ளது. இந்தக் கணக்கின் கீழ் மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, தொகையை வழங்கி வருகிறது. இதைப் பயன்படுத்துவதினால் ஏராளமான நிர்வாக பலன்கள் கிடைக்கின்றன.
முதலாவதாக சுகாதார அமைச்சகத்தால் நிதி உதவி வழங்கப்படும் மத்திய அரசின் பிற திட்டங்களைப் போல் அல்லாமல் தடுப்பூசிக்கான செலவுகள் பிரத்தியேக நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுவதால் இவற்றின் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு எளிதாகிறது.
மேலும் பிற கோரிக்கைகளுக்குரிய காலாண்டு செலவு கட்டுப்பாட்டு வரையறைகளில் இருந்து இந்த மானியத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசித் திட்டம் தங்குத்தடையின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய இது உதவியாக இருக்கிறது. சுகாதார அமைச்சகத்தின் மேற்பார்வையில் தடுப்பூசிகளுக்கான தொகை வழங்கப்படுகிறது.
மாநிலங்களுக்கு தடுப்பூசிகள், மானியம் போன்று வழங்கப்படுவதுடன் தடுப்பூசிகளின் நிர்வாகத்தை மாநிலங்களே மேற்கொள்கின்றன. இவ்வாறு அளிக்கப்படும் திட்டத்தை மாற்றியமைப்பதற்கான போதிய நிர்வாக நெகிழ்வுத் தன்மையும் இடம்பெற்றுள்ளன.
எனவே இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு, தடுப்பூசிக்கான போதிய நிதியின் இருப்பை உறுதி செய்வதற்கு, “நிதி ஒதுக்கீடு பெரும் பொருட்டல்ல”. ‘மாநிலங்களுக்கான மாற்றல்’ என்று தலைப்பிடப்பட்டிருப்பதால், மத்திய அரசால் செலவினங்களை ஏற்க முடியாது என்பது பொருளல்ல.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717405
------
(Release ID: 1717426)
Visitor Counter : 234