பிரதமர் அலுவலகம்
அசாம் முதல்வராக பதவி ஏற்ற திரு ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
10 MAY 2021 1:01PM by PIB Chennai
அசாமில் முதல்வராக பதவி ஏற்ற, திரு ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் இதர அமைச்சர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் சுட்டுரையில் விடுத்துள்ள செய்தியில்,
‘‘இன்று பதவி ஏற்ற, திரு ஹிமந்த பிஸ்வா மற்றும் இதர அமைச்சர்களுக்கு வாழ்த்துகள். அசாமின் வளர்ச்சிப் பயணத்துக்கு இந்த குழு உந்துதல் அளிக்கும் என்பதிலும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்பதிலும் நான் உறுதியாக உள்ளேன்.’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
திரு சர்பானந்தா சோனோவால் பங்களிப்பையும் திரு நரேந்திர மோடி பாராட்டினார். இது தொடர்பாக சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில்,
‘‘ கடந்த ஐந்தாண்டுகளாக, மக்களுக்காகவும், மாநில வளர்ச்சிக்காவும் நிர்வாகம் செய்தவர், என்னுடன் பணியாற்றிய மதிப்புமிக்க திரு சர்பானந்தா சோனோவால். அசாம் மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தியதில் அவரது பங்களிப்பு மகத்தானது.’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
*****
(Release ID: 1717412)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam