இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
முன்னாள் சர்வதேச தடகள வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு கொவிட் சிறப்பு ஆதரவு பிரிவு: மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்முயற்சி
Posted On:
09 MAY 2021 11:15AM by PIB Chennai
பெருந்தொற்று காலத்தில் முன்னாள் சர்வதேச தடகள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மருத்துவம், நிதி மற்றும் தளவாட ஆதரவு கிடைப்பதற்காக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியவை ஓர் சிறப்பு ஆதரவு பிரிவை உருவாக்குவதற்காக இணைந்துள்ளன.
மருத்துவ உதவி, பிராணவாயு, மருத்துவமனையில் அனுமதி, மற்றும் இதர தேவைகளை முன்னாள் சர்வதேச தடகள வீரர்களும், பயிற்சியாளர்களும், ஏற்கனவே இயங்கி வரும் https://www.research.net/r/SAI-IOA-Covid-19 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
ஒவ்வொரு மாநிலத்திலிருந்து விண்ணப்பித்துள்ளவர்களுக்கு உதவும் வகையில், தேசிய அளவிலான குழுவைத் தவிர, இந்திய ஒலிம்பிக் சங்கம், மாநில அரசின் அதிகாரிகள் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய மாநில அளவிலான பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவ மற்றும் தளவாட ஆதரவு மட்டுமல்லாமல் விளையாட்டு வீரர்களுக்கான பண்டித தீனதயாள் உபாத்தியாயா தேசிய நல்வாழ்வு நிதியிலிருந்தும், நலிவடைந்த விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.
இந்த முன்முயற்சி பற்றிப் பேசிய மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, “தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்திய விளையாட்டிற்காகப் பங்களித்து, நாட்டிற்கு பெருமை தேடித் தந்தவர்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம். தற்போதைய நெருக்கடியான காலக்கட்டத்தில், நமது முன்னாள் தடகள வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஆதரவு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த முன்முயற்சி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தேவை ஏற்படுபவர்களுக்கு நம்மால் உதவ முடியுமென்று நம்புகிறேன்”, என்று கூறினார்.
மிகப் பெரிய குடும்பமாக விளங்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற சவாலான நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் டாக்டர் நரிந்தர் துரூவ் பாத்ரா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717175
*****************
(Release ID: 1717238)
Visitor Counter : 266