சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 16.73 கோடியாக அதிகரிப்பு

Posted On: 08 MAY 2021 12:20PM by PIB Chennai

பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், சர்வதேச சமூகம் அளித்துவரும் உதவிகளை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் முறையாக ஒதுக்கப்பட்டு, விநியோகிக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது.

இதுவரை 2933 பிராணவாயு செறிவூட்டிகள், 2429 பிராணவாயு சிலிண்டர்கள், 13 பிராணவாயு உற்பத்தி கருவிகள், 2951 செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் சுமார் 3 லட்சம் ரெம்டெசிவிர்  குப்பிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 16.73 கோடியை இன்று கடந்துள்ளது.

தமிழகம் (10,703) உள்ளிட்ட 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18-44 வயதில் 14,88,528 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி 24,37,299 முகாம்களில் 16,73,46,544 தடுப்பூசிகள் நாடுமுழுவதும் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 23 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தடுப்பூசித் திட்டத்தின் 112-வது நாளன்று (மே 7, 2021) 22,97,257 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 18,692 முகாம்களில் 9,87,909 பயனாளிகளுக்கு முதல் டோஸும், 13,09,348 பயனாளிகளுக்கு இரண்டாவது டோஸும் போடப்பட்டன.

கொவிட் தொற்றிலிருந்து இந்தியாவில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 1,79,30,960 ஆக இன்று பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,18,609 பேர் குணமடைந்தனர். இவர்களில் 71.93 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

நம் நாட்டில் இதுவரை 30 கோடிக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 4,01,078 புதிய பாதிப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளது. இதில் 70.77 சதவீதம், 10 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 54,022 பேரும், அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 48,781 பேரும், கேரளாவில் 38,460 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 37,23,446 ஆக அதிகரித்துள்ளது. இதில் 80.68 சதவீதம், 12 மாநிலங்களில் பதிவாகியுள்ளது.

தேசிய உயிரிழப்பு வீதம், 1.09 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,187 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 77.29 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

டாமன் டையூ மற்றும் தாதர் நாகர் ஹவேலி, மிசோரம், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1716991

-----



(Release ID: 1717011) Visitor Counter : 169