பிரதமர் அலுவலகம்

கொவிட்- 19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஆயுதப்படைகளின் பங்களிப்பிற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 06 MAY 2021 6:00PM by PIB Chennai

கொவிட்- 19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஆயுதப்படைகளின் பங்களிப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கண்களுக்குப் புலப்படாத எதிரியை எதிர்த்துப் போராடுதல்: அதிகரித்துவரும் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சகத்தின் நடவடிக்கைகள்என்ற தலைப்பில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்ட கட்டுரையைக் குறிப்பிட்டு பிரதமர் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில்,

“ ‘நீர்’, ‘நிலம்’, ‘வானம்’... கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில், நமது ஆயுதப்படைகள் அனைத்து நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன”, என்று குறிப்பிட்டுள்ளார்.

*****************(Release ID: 1716592) Visitor Counter : 24