பிரதமர் அலுவலகம்

சவுத்ரி அஜித் சிங் அவர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 06 MAY 2021 10:31AM by PIB Chennai

முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி அஜித் சிங் அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், சவுத்ரி அஜித் சிங் அவர்களின் மறைவுக்கு பிரதமர் தனது துயரினைத் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலனில், சவுத்ரி அஜித் சிங் காட்டிய ஈடுபாட்டையும், மத்திய அரசின் பல்வேறு துறைகளை திறம்படக் கையாண்ட அவரது ஆற்றலையும் நினைவு கூர்ந்த பிரதமர் திரு மோடி, அன்னாரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1716427) வருகையாளர் எண்ணிக்கை : 186