சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பிஎம் கேர்ஸ் நிதியுதவியுடன் இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் புதுதில்லி எய்ம்ஸ் மற்றும் ஆர்எம்எல் மருத்துவமனையில் நிறுவப்பட்டன, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 3.38 லட்சம் பேர் குணமடைந்தனர்

Posted On: 05 MAY 2021 12:04PM by PIB Chennai

கொவிட்-19-க்கு எதிரான போரில் முக்கிய முன்னேற்றமாக, பிஎம் கேர்ஸ் நிதியுதவியுடன் இரண்டு அதிக சக்தி வாய்ந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் புதுதில்லி எய்ம்ஸ் மற்றும் ஆர்எம்எல் மருத்துவமனையில் ஒரே வாரத்தில் நிறுவப்பட்டுள்ளன.

போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று, கோயம்புத்தூரில் இருந்து விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்ட இந்த இரு ஆலைகளும் நேற்று நிறுவப்பட்டன.

 இன்று மாலையில் இருந்து இரு ஆலைகளும் ஆக்சிஜன் விநியோகத்தை தொடங்கும்.

கொவிட்-19 பாதிப்புகளின் அதிகரிப்பை திறம்பட கையாளும் நோக்கில்நாடு முழுவதும் 500 ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ பிஎம்-கேர்ஸ் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மூன்று மாதங்களுக்குள் இவைகள் நிறுவப்படும்.

புதுதில்லியை பொருத்தவரை, எய்ம்ஸ் அவசர சிகிச்சை மையம், டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, சஃப்தர்ஜங்க் மருத்துவமனை, லேடி ஹர்திங் மருத்துவ கல்லூரி மற்றும் எய்ம்ஸ், ஜஜ்ஜார், ஹரியானா ஆகிய மருத்துவமனைகளில் ஐந்து ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ முடிவெடுக்கப்பட்டது.

இதற்கிடையே, மூன்றாம் கட்ட தடுப்பு மருந்து வழங்கல் திட்டம் விரிவடைந்து வரும் நிலையில், 16 கோடிக்கும் அதிகமானோருக்கு இதுவரை கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வெறும் 109 நாட்களில் இந்த மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது. இதே அளவை எட்ட அமெரிக்காவுக்கு 111 நாட்களும், சீனாவுக்கு 116 நாட்களும் ஆயின.

12 மாநிலங்களில் உள்ள 18 முதல் 45 வயது வரையிலான 6,71,285 பயனாளிகள் கொவிட் தடுப்பு மருந்தை பெற்றுள்ளனர்: சத்தீஸ்கர் (1,026), தில்லி (82,000), குஜராத் (1,61,625), ஜம்மு காஷ்மீர் (10,885), ஹரியானா (99,680), கர்நாடகா (3,840), மகாராஷ்டிரா (1,11,621), ஒடிசா (13,768), பஞ்சாப் (908), ராஜஸ்தான் (1,30,071), தமிழ்நாடு (4,577) மற்றும் உத்தரப் பிரதேசம் (51,284).

கடந்த 24 மணி நேரத்தில் 14 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் 109-வது நாளில் (2021 மே 4), 14,84,989 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன. 14,011 முகாம்களில், 7,80,066 பயனாளிகளுக்கு முதல் டோசும், 7,04,923 பயனாளிகளுக்கு இரண்டாவது டோசும் வழங்கப்பட்டன.

இந்தியாவில் இது வரை மொத்த எண்ணிக்கையாக 1,69,51,731 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைதல் விகிதம் 82.03 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,38,439 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

73.4% புதிய குணமடைதல்களுக்கு 10 மாநிலங்கள் காரணமாக உள்ளன. தொடர்ந்து குறைந்து வரும் இறப்பு விகிதம் 1.09 சதவீதமாக தற்சமயம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,780 இறப்புகள் பதிவாகியுள்ளன.

74.97% புதிய இறப்புகளுக்கு 10 மாநிலங்கள் காரணமாக உள்ளன. மகாராஷ்டிராவில் மிக அதிகமாக 891 உயிரிழப்புகளும், உத்தரப் பிரதேசத்தில் 351-ம் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 7 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ஒரு இறப்பு கூட பதிவாகவில்லை.

*******************


(Release ID: 1716323) Visitor Counter : 266