பிரதமர் அலுவலகம்

இந்தியா-இங்கிலாந்து மெய்நிகர் உச்சிமாநாடு (மே 4, 2021)

Posted On: 02 MAY 2021 11:00PM by PIB Chennai

இங்கிலாந்து பிரதமர் மாண்புமிகு திரு போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2021 மே 4 அன்று மெய்நிகர் உச்சிமாநாட்டை நடத்தவிருக்கிறார்.

2004-ஆம் ஆண்டு முதல் இந்தியாவும், இங்கிலாந்தும் கேந்திர கூட்டணியில் ஈடுபட்டு வருகின்றன. இதன்படி இரு நாடுகளும் முறையான உயர்மட்ட அளவிலான பரிமாற்றங்களை மேற்கொள்வதுடன், பன்முகத் தன்மை வாய்ந்த துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளன. பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், நமது பன்முகத் தன்மை வாய்ந்த உறவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லவும் ஒரு முக்கிய வாய்ப்பாக இந்த உச்சிமாநாடு அமையும். கொவிட்- 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பு மற்றும் பெருந்தொற்றுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள்.

இரு நாடுகளில் வசிக்கும் மக்கள் இடையேயான உறவு, வர்த்தகம் மற்றும் வளம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, பருவநிலை செயலாக்கம் மற்றும் சுகாதாரம் ஆகிய ஐந்து முக்கிய துறைகளில், அடுத்த தசாப்தத்தில் இந்தியா-இங்கிலாந்து நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 2030-ஆம் ஆண்டுக்கான விரிவான திட்ட அறிக்கை, உச்சிமாநாட்டின்போது வெளியிடப்படும்.

*****

 



(Release ID: 1715631) Visitor Counter : 196