நிதி அமைச்சகம்

பெருந்தொற்றின் காரணமாக சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் வரி செலுத்துவோருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிப்பு

Posted On: 02 MAY 2021 3:15PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்காற்று நிவாரணங்களைப் பெறுவதில் வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பல்வேறு நிவாரணச் சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 2021 மே 1 தேதியிடப்பட்டு, இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

1.     வட்டி விகிதம் குறைப்பு:

தாமதமாக வரி செலுத்துபவர்களுக்கு ஆண்டுக்கு 18 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்திற்கு பதிலாக, ரூ. 5 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் பதிவு செய்யப்பட்ட நபர்கள், ரூ. 5 கோடி வரை வருமானம் ஈட்டும் நபர்கள், கலவைத் திட்டத்தின் கீழ் வரி செலுத்த விருப்பம் தெரிவித்துள்ள நபர்கள் ஆகிய பிரிவினருக்கு தனித்தனியே சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

2.    தாமதமாக வரி செலுத்துவோருக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

3.    ஜிஎஸ்டிஆர்-1, ஐஎஃப்எஃப், ஜிஎஸ்டிஆர்-4, ஐடிசி-04 ஆகிய படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கான தேதிகள் நீட்டிப்பு:

  • ஏப்ரல் மாதத்திற்கான (மே மாதத்தில் வரவிருக்கும் ஜிஎஸ்டிஆர்-1 மற்றும் ஐஎஃப்எஃப் படிவங்களைத் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதி 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது
  • 2020-21 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டிஆர்-4 படிவத்தைத் தாக்கல் செய்வதற்கான  தேதி, ஏப்ரல் 30 முதல் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
  • 2021 ஜனவரி - மார்ச் மாத காலாண்டிற்கான ஐடிசி-04 படிவத்தை  வழங்குவதற்கான இறுதி தேதி ஏப்ரல் 25 முதல் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715502

------

 (Release ID: 1715523) Visitor Counter : 123