சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

3வது கட்ட கொவிட் தடுப்பூசி போடும் பணி நாளை தொடக்கம்: இன்று காலை 9.30 மணி வரை 2.45 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் பதிவு

Posted On: 30 APR 2021 11:09AM by PIB Chennai

குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, 3வது கட்ட தடுப்பூசித் திட்டத்துக்கு  கோவின் இணையதளத்தில் இன்று காலை 9.30 மணிவரை 2.45 கோடிக்கும் மேற்பட்டோர்  பதிவு செய்துள்ளனர். இதற்கான பதிவு 2021 ஏப்ரல் 28ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் நாடு முழுவதும் போடப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை இன்று 15.22 கோடியைக் கடந்ததுஇன்று காலை 7 மணி வரை 15,22,45,179 கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 21 லட்சத்துக்கும் மேற்பட்ட  தடுப்பூசிகள் போடப்பட்டன. தடுப்பூசித் திட்டம் தொடங்கி 104வது நாளான நேற்று  22,24,548 தடுப்பூசிகள் போடப்பட்டன.

மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கடந்த 24 மணி நேரத்தில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட  (19,20,107) கொவிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டனஇது இந்தியாவில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மிக அதிகம்.

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,53,84,418-ஆக அதிகரித்துள்ளது. இவர்களின் தேசிய சதவீதம் 81.99.  கடந்த 24 மணி நேரத்தில் 2,97,540 பேர் குணமடைந்துள்ளனர். 3,86,452 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 73.05 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, சத்தீஸ்கர், மேற்குவங்கம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 66,159 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின்  மொத்த எண்ணிக்கை 31,70,228- எட்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,498 பேர் உயிரிழந்துள்ளனர்

கொவிட் தொற்று நேரத்தில் மனநலம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கவும், உளவியல் ஆலோசனை வழங்கவும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மன நலம் மற்றும் நரம்பு அறிவியலுக்கான தேதிய நிறுவனம் (நிம்ஹன்ஸ்) 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண் (080-4611 0007)- இயக்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714978

*******

 

 


(Release ID: 1715071) Visitor Counter : 217