பாதுகாப்பு அமைச்சகம்
அகமதாபாத்தில் உள்ள கொவிட் சிகிச்சை மருத்துவமனைக்கு இந்திய கப்பல் படை மருத்துவக் குழு
प्रविष्टि तिथि:
30 APR 2021 10:34AM by PIB Chennai
அகமதாபாத்தில் உள்ள “பி.எம். கேர்ஸ் கொவிட் மருத்துவமனைக்கு”, மேற்கு கப்பல் படைப் பிரிவைச் சார்ந்த 57 உறுப்பினர் கொண்ட மருத்துவக் குழு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று அகமதாபாத் சென்றடைந்த இந்தக் குழுவில், நான்கு மருத்துவர்கள், ஏழு செவிலியர், 26 மருத்துவப் பணியாளர்கள், 20 மருத்துவ உதவியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர், கொவிட் தொற்று நெருக்கடியை சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள கொவிட் சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள். இந்தக் குழு அங்கு இரண்டு மாத காலத்திற்கு பணியாற்ற உள்ளது. தேவைக்கேற்ப இந்தக் கால அளவு நீட்டிக்கப்படும்.
***
(Release ID: 1714975)
(रिलीज़ आईडी: 1714979)
आगंतुक पटल : 270