தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இஎஸ்ஐசி மருத்துவமனைகளின் கொவிட்-19 சிகிச்சை வார்டுகளில் உள்ள படுக்கைகளின் காலி நிலவரத்தை ஆன்லைனில் அறியலாம்

प्रविष्टि तिथि: 29 APR 2021 5:24PM by PIB Chennai

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தி்ன கீழ் செயல்படும் இஎஸ்ஐசி, தற்போதைய கொரோனா தொற்று சூழலில்மக்கள் மைய சேவைகள் குறித்த தகவல்களை பரப்பும் மற்றொரு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 

கொவிட் சிகிச்சை மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பதுதான் தற்போதைய தேவை. பல இஎஸ்ஐ மருத்துவமனைகள், மக்களுக்காக கொவிட் சிகிச்சை வார்டுகளை திறந்துள்ளன. சில இஎஸ்ஐ மருத்துவமனைகள் கொவிட் நோயாளிகளுக்காக பிரத்தியேக சேவைகளை அளிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. 

மக்கள் சேவையே மகேசன் சேவைஎன்ற நோக்கில் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர்.

தேவை அதிகரிப்பால், கொவிட் சிகிச்சை மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதில்லை. அப்படியே படுக்கைகள் இருந்தாலும், அதை பற்றிய நிகழ்நேர தகவல்கள் தேவைப்படுவோருக்கு உடனடியாக கிடைப்பதில்லை.  இதற்காக இஎஸ்ஐசி நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு, படுக்கை வசதி நிலவரங்களை  ஆன்லைன் மூலம் அறிந்துக் கொள்ளும் வசதியை உருவாக்கியுள்ளது.

இது கொவிட் சிகிச்சை அளிக்கும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் உள்ள காலி படுக்கைகளின் நிலவரத்தை உடனுக்குடன் தெரிவிக்கின்றன.

 https://www.esic.in/Dashboard/CovidDashBoard.aspx. என்ற இணையதள இணைப்பின் மூலம் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் உள்ள காலி படுக்கைகளின் நிலவரத்தை அறிந்துக் கொண்டு, எங்கு சிகிச்சை பெறலாம் என்ற முடிவை மக்கள் எடுக்கலாம்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714870

*****************


(रिलीज़ आईडी: 1714892) आगंतुक पटल : 322
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Odia , Telugu , Kannada