இந்திய போட்டிகள் ஆணையம்

எஸ்ஜிஎஸ் நிறுவனத்தின் 64.3 சதவீத பங்குகளை டாடா டிஜிட்டல் நிறுவனம் வாங்க சிசிஐ ஒப்புதல்

Posted On: 29 APR 2021 10:35AM by PIB Chennai

எஸ்ஜிஎஸ் நிறுவனத்தின் 64.3 சதவீத பங்குகளைடாடா டிஜிட்டல் நிறுவனம் வாங்கவும், இன்னோவேட்டிவ் ரீடைல் கான்செப்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ( ஐஆர்சி) நிறுவனத்தின் மீது எஸ்ஜிஎஸ் நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டுக்கும் இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

 

இந்த இணைவின் மூலம், எஸ்ஜிஎஸ் நிறுவனத்தின் மொத்த பங்கில் 64.3 சதவீதத்தை முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை கொள்முதல் மூலம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடவடிக்கைகளில் (பரிவர்த்தனை 1) டாடா டிஜிட்டல் நிறுவனம் கொள்முதல் செய்யும்அதைத் தொடர்ந்து தனியான பரிவர்த்தனை மூலம், எஸ்ஜிஎஸ் நிறுவனம், ஐஆர்சி நிறுவனத்தின் மீதான முழு  கட்டுப்பாட்டையும் பெறலாம் (பரிவர்த்தனை 2).  பரிவர்த்தனை 1 மற்றும் பரிவர்த்தனை 2 ஆகியவை கூட்டாக முன்மொழியப்பட்ட   இணைவு என குறிப்பிடப்படுகின்றனஇந்த இணைவு மூலம் எஸ்ஜிஎஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை டாடா டிஜிட்டல் நிறுவனம் வாங்கி, எஸ்ஜிஎஸ் நிறுவனத்தின் மீதான முழு கட்டுப்பாட்டையும் பெறும்.

டாடா டிஜிட்டல் நிறுவனம், டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம். டாட்டா சன்ஸ் நிறுவனம் டாடா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களை வைத்திருக்கும் இறுதி நிறுவனம்தற்போது டாடா டிஜிட்டல் நிறுவனம் தொழில்நுட்ப சேவைகள் தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளது. டாடா சன்ஸ் குழுமம், தனது குழும நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் உணவு மற்றும் பலசரக்கு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தொழிலிலும் ஈடுபட்டுள்ளது

 

எஸ்ஜிஎஸ் நிறுவனம் www.bigbasket.com  என்ற இணையதளம் மற்றும் செயலி  மூலம் இந்தியாவில் பலசரக்கு விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இந்த வெப்சைட் மற்றும் செயலியை ஐஆர்சி நிறுவனம் இயக்குகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714774

 

*****

 

(Release ID: 1714774)


(Release ID: 1714805) Visitor Counter : 268