மத்திய அமைச்சரவை

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் - ஆஸ்திரேலிய பட்டயக் கணக்காளர் நிறுவனம்: பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 20 APR 2021 3:47PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம், ஆஸ்திரேலியாவின் பட்டயக் கணக்காளர் நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையேயான பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒப்பந்தத்தின் விவரங்கள்:

இந்த பரஸ்பர ஒப்பந்தத்தின் கீழ் கணக்கியல் சார்ந்த அறிவை மேம்படுத்துவதற்கான வடிவமைப்பை உருவாக்குவதில் பரஸ்பர ஒத்துழைப்பு, தொழில் மற்றும் அறிவுசார் வளர்ச்சி, சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் நலனை மேம்படுத்துதல், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் கணக்கியலின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ பங்களிப்பு ஆகிய துறைகளில்  இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனமும், ஆஸ்திரேலியாவின் பட்டயக் கணக்காளர் நிறுவனமும் இணைந்து பணியாற்றும்.

ஒப்பந்தத்தினால் ஏற்படக்கூடிய தாக்கம்:

இந்த பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம்:

•        இருநாட்டு பட்டயக் கணக்காளர் நிறுவனங்கள் இடையேயான உறவை வலுப்படுத்தும்

•        உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த‌ நிறுவனங்களின் நலனைக் கருத்தில் கொண்டு பரஸ்பர உறவை மேம்படுத்தும்

•        இரு தரப்பிலும் தொழில் சார்ந்த நிபுணர்களின் இயக்கத்தை அதிகரிப்பதுடன், இரு நாடுகளின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு புதிய பரிமாணத்தை அளிக்கும்

•        சர்வதேச சுற்றுச்சூழலில் கணக்காளர்களுக்கு எழும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பட்டயக் கணக்காளர் நிறுவனங்கள், தலைமைப் பண்புடன் திகழ்வதற்கான வாய்ப்புகளை வழங்கும்.

பலன்கள்:

இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் வாயிலாக, இந்திய பட்டயக் கணக்காளர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் இந்தியாவிற்கான பணவரத்தும் அதிகரிக்கும்.

செயலாக்க உத்தியும், இலக்குகளும்:

இரண்டு அமைப்புகளில் சேர்வதற்கான தேர்வு, பயிற்சி மற்றும் நடைமுறை அனுபவங்களில் தேர்ச்சி பெற்று, உறுப்பினர் அந்தஸ்து பெற்றுள்ள பிற அமைப்பின் உறுப்பினர்களுக்கு, இந்த ஒப்பந்தத்தின் மூலம் கணக்காளர் தகுதிக்கான அங்கீகாரம் வழங்கப்படும். தகுதி, பிறரது பயிற்சிக்கான அங்கீகாரம், இருதரப்பிற்கும் சாதகமான முறையில் உறுப்பினர்களை சேர்ப்பது ஆகியவை குறித்த பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் ஒன்றை இரு நாட்டு நிறுவனங்களும் வடிவமைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1712867

*****************



(Release ID: 1712897) Visitor Counter : 222