சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டில் போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 11.44 கோடியைக் கடந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 15 APR 2021 12:33PM by PIB Chennai

நாட்டில் போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை இன்று 11.44 கோடியைக் கடந்தது.

இன்று காலை ஏழு மணி வரை போடப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 11,44,93,238. கடந்த 24 மணி நேரத்தில் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டன.

தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு, 89வது நாளான நேற்று 33,13,848 தடுப்பூசிகள் போடப்பட்டன.

நாட்டில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.  இவர்களில் 80.76 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, சட்டீஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக  58,952 பேருக்கு நேற்று தொற்று ஏற்பட்டது.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 14,71,877 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் மொத்த பாதிப்பில் 10.46 சதவீதம்.

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று  1,24,29,564-ஐ எட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 93,528 பேர் குணமடைந்தனர்.  1,038 பேர் உயிரிழந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1711957

------


(வெளியீட்டு அடையாள எண்: 1712000) வருகையாளர் எண்ணிக்கை : 321
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam