பாதுகாப்பு அமைச்சகம்

இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக கஜகஸ்தன் பாதுகாப்பு அமைச்சர் இந்தியா வருகை

Posted On: 07 APR 2021 12:42PM by PIB Chennai

கஜகஸ்தான் குடியரசின் பாதுகாப்பு அமைச்சர் லெஃப்டினெண்ட் ஜெனரல் நுர்லான் யெர்மேக்பயேவ், 2021 ஏப்ரல் 7 முதல் 10 வரையிலான அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியா வருகிறார். இன்று ஜோத்பூர் வந்தடையவுள்ள அவர், ஜெய்சால்மர், புதுதில்லி, ஆக்ரா ஆகிய நகரங்களுக்கு பயணம் செய்து, கூட்டங்களில் கலந்து கொண்டு, ராணுவ வசதிகளைப் பார்வையிடவுள்ளார்.

2021 ஏப்ரல் 9 அன்று புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கோடு இருதரப்பு கூட்டம் ஒன்றில் லெஃப்டினெண்ட் ஜெனரல் நுர்லான் யெர்மேக்பயேவ் கலந்து கொள்ளவுள்ளார். கஜகஸ்தானின் பாதுகாப்பு அமைச்சராக லெஃப்டினெண்ட் ஜெனரல் நுர்லான் யெர்மேக்பயேவ் மீண்டும் நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெறவுள்ள முதல் கூட்டம் இதுவாகும்.

மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் 2020 செப்டம்பர் 5 அன்று இரு அமைச்சர்களும் சந்தித்துக் கொண்டனர். பாதுகாப்பு அமைச்சரின் அழைப்பை ஏற்று கஜகஸ்தான் குடியரசின் பாதுகாப்பு அமைச்சர் இந்தியா வருகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1710043

******(Release ID: 1710154) Visitor Counter : 158