சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

7.3 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி

Posted On: 03 APR 2021 11:29AM by PIB Chennai

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முழுவதும் 7.3 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்குத்  தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா மேலும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது.

இன்று காலை 7 மணி வரை, 11,53,614 முகாம்களில்‌ 7,30,54,295 பயனாளிகளுக்குக் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

77-வது நாளான நேற்று (ஏப்ரல் 02, 2021) நாடு முழுவதும் 30,93,795 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்திஸ்கர், தில்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 81.42 விழுக்காடு பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 89,129 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 47,913 பேரும், கர்நாடகாவில் 4,991 பேரும், சத்திஸ்கரில் 4,174 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 6,58,909 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 5.32 சதவீதமாகும்.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,15,69,241 ஆக (93.36%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 44,202 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 714 பேர் உயிரிழந்துள்ளனர்.

அன்றாட புதிய பாதிப்புகளும் உயிரிழப்புகளும் கடந்த இரண்டு வாரங்களில் அதிகரித்துவரும் 11 மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்களில் கூடுதல் கவனத்துடன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறைத் தலைமை இயக்குநர்கள், சுகாதாரச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கவுபா  தலைமையில் நேற்று உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1709296

*****************


(Release ID: 1709319) Visitor Counter : 280