சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தடுப்பு மருந்து ஏப்ரல் மாதத்தின் அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் மையங்களில் வழங்கப்படும்

Posted On: 01 APR 2021 1:27PM by PIB Chennai

புதுதில்லி, ஏப்ரல் 1, 2021

நாடு முழுவதிலும் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையை அதிக அளவில் விரிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாக, ஏப்ரல் மாதத்தின் அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் மையங்களில் தடுப்பு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய அரசு, 2021 ஏப்ரல் மாதத்தில் அரசு விடுமுறை உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் தடுப்பூசி செலுத்துவதற்கு  தேவையான நடவடிக்கைகளை தடுப்பு மருந்து வழங்கும் மையங்களில் எடுக்குமாறு  கேட்டுக் கொண்டுள்ளது.

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையின் வேகத்தையும், வீச்சையும் அதிகரிப்பதற்காக அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தடுப்பு மருந்து மையங்களையும் சிறப்பாக பயன்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் 2021 மார்ச் 31 அன்று நடைபெற்ற விரிவான ஆலோசனைக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து வழங்கலுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்தி வரும் மேம்பட்ட மற்றும் செயல்திறன்மிக்க அணுகலை சார்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அதிகம் பாதிக்கப்படக் கூடிய மக்களை கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கலை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் வழிமுறை உயர்மட்ட அளவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் ஆய்வு செய்யப்பட்டும் வருகிறது.

தடுப்பு மருந்து வழங்கலுக்கான தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையை தொடர்ந்து 2021 ஏப்ரல் 1 முதல் 45 வயதிறகு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கலை தொடங்க அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

----



(Release ID: 1709004) Visitor Counter : 271