மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பதிவு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் துவக்கம்

Posted On: 27 MAR 2021 4:01PM by PIB Chennai

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 1-ஆம் வகுப்பில் சேர்வதற்கான இணையதள பதிவு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் துவங்குகிறது.

இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் சேர ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் நேரடியாகச் சென்று பதிவு செய்யலாம்.

ஒன்றாம் வகுப்புக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி மாலை 7 மணி வரை https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்ட் செல்பேசி செயலி வாயிலாகவும் பதிவு செய்யலாம்

இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு 08.04.2021 காலை 8 மணி முதல் 15.04.2021 மாலை 4 மணி வரை இடங்களின் அடிப்படையில் பதிவு நடைபெறும்.

2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணையின் படி https://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தில் 11-ஆம் வகுப்பில் சேர்வதற்கான படிவங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்போது நாடு முழுவதும் 1247 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1708055

------(Release ID: 1708094) Visitor Counter : 213