பிரதமர் அலுவலகம்
வங்கதேச தேசிய போர்வீரர்கள் நினைவிடத்துக்கு சென்றார் பிரதமர்
प्रविष्टि तिथि:
26 MAR 2021 2:17PM by PIB Chennai
இரண்டு நாள் பயணமாக வங்கதேசத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி சென்றடைந்ததும், 1971ம் ஆண்டு நடந்த வங்கதேச விடுதலைப் போரில் உயிரிழந்த வீரர்களின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் மரியாதை செலுத்துவதற்காக தேசிய போர்வீரர்கள் நினைவிடத்துக்கு (ஜதியோஸ்ரீதிஷவ்டோ) சென்றார்.
இந்த நினைவிடம், தலைநகர் டாக்காவுக்கு வடமேற்கே 35 கி.மீ தொலைவில் சாவர் என்ற இடத்தில் உள்ளது. இதை சையத் மைனுல் ஹூசைன் என்பவர் வடிவமைத்தார்.
நினைவிட வளாகத்தில் அர்ஜூன் மரக்கன்றையும் பிரதமர் நட்டு, பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார். ‘‘
சாவர் நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கு, உண்மையின் உன்னத வெற்றியின் நீடித்த நினைவூட்டலாகவும், வஞ்சம் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான தைரியமாகவும் விளங்க வேண்டும் என நான் வேண்டுகிறேன்’’ என பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோதி எழுதினார்.
--------
(रिलीज़ आईडी: 1707789)
आगंतुक पटल : 277
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam