சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாடு முழுவதும் 5.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: கடந்த 24 மணி நேரத்தில் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டன

प्रविष्टि तिथि: 26 MAR 2021 11:35AM by PIB Chennai

நாட்டில் கொவிட் தடுப்பூசி போடும் பணி இன்னும் வேகம் எடுத்துள்ளது. இன்று காலை 7 மணி வரை 5.5 கோடிக்கும் மேற்பட்டோர் கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டோரின் எண்ணிக்கை 2,47,67,172.

69ம் நாளான நேற்று 23 லட்சத்துக்கும் அதிகமான (23,58,731) தடுப்பூசிகள் போடப்பட்டன.

மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, சட்டீஸ்கர் மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக தினசரி கொவிட் பாதிப்பு 35,952-ஆக உள்ளது

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி மாத மத்தியில் மிகக் குறைந்த அளவை எட்டியது. அதன்பின் தொடர்ந்து அதிகரிக்கிறது.

இன்று நாட்டில் மொத்தம்  4.21 லட்சம் பேர்  (4,21,066) கொவிட் சிகிச்சை பெறுகின்றனர்

நாட்டில் கொவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,12,64,637- எட்டியுள்ளது. குணமடைந்தோர் வீதம்  95.09 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32,987 பேர் குணமடைந்துள்ளனர். 257 பேர் உயிரிழந்துள்ளனர்.

------


(रिलीज़ आईडी: 1707755) आगंतुक पटल : 248
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam