திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் அமைச்சகத்தின் ‘மகாத்மா காந்தி தேசிய உதவித்தொகைக்கான’ விண்ணப்பங்கள் வரவேற்பு
Posted On:
25 MAR 2021 11:38AM by PIB Chennai
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் அமைச்சகம் அகமதாபாத், பெங்களூரு, ஜம்மு, கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராஞ்சி, உதய்பூர் மற்றும் விசாகப்பட்டினத்தின் இந்திய மேலாண்மைக் கழகங்களுடன் இணைந்து ‘மகாத்மா காந்தி தேசிய உதவித்தொகை’ 2021-23-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகள் திட்டத்தின் கீழ் இந்திய மேலாண்மைக் கழகங்களில் வகுப்பறைப் பயிற்சிகளுடன் மாவட்ட பொருளாதாரங்களின் திட்டம் மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான தனித்துவமான வாய்ப்பும் இளைஞர்களுக்கு வழங்கப்படும்.
இந்த உதவித்தொகைத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு 2021 மார்ச் 27-ஆம் தேதி கடைசி நாளாகும். https://www.iimb.ac.in/mgnf/ என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1707453
*****************
(Release ID: 1707589)
Visitor Counter : 185