சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாடு முழுவதும் 3.29 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொவிட் 19 தடுப்பூசி
प्रविष्टि तिथि:
16 MAR 2021 11:23AM by PIB Chennai
கொவிட் தொற்றுக்கு, எதிரான பேராட்டத்தில், இன்று இந்தியா பல உச்சங்களைத் தொட்டது. கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3.29 கோடியைக் கடந்தது.
அதிகபட்சமாக, நேற்று ஒரே நாளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கடந்த 15 நாளில், தடுப்பூசி போட்டுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் (1,02,69,368) கடந்து விட்டது.
நேற்று காலை 7 மணி வரை மொத்தம் 3,29,47,432 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
59வது நாளான நேற்று 30,39,394 தடுப்பூசிகள் போடப்பட்டன.
மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழகத்தில் கொவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், 24,492 பேருக்கு புதிதாக கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 79.73 சதவீதம் பேர், மேற்கண்ட ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 15,051 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பில் 1,818 பேருக்கும், கேரளாவில் 1,054 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 2,23,432-ஆக உள்ளது.
நாட்டில் கொவிட் பரிசோதனை மேற்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22.8 கோடியைக் கடந்து விட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் 131 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1705043
-------
(रिलीज़ आईडी: 1705112)
आगंतुक पटल : 262