சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தினசரி கொவிட் பாதிப்பு அதிகரிப்பு: மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப்புக்கு உயர்நிலை குழுவை அனுப்பியது மத்திய அரசு

Posted On: 07 MAR 2021 11:32AM by PIB Chennai

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழகத்தில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18,711 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 84.71 சதவீதம் பேர் , மேலே கூறப்பட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 10,187 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 2,791 பேருக்கும், பஞ்சாப்பில் 1,159 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் நிலவரங்களை  மத்திய அரசு தொடர்ந்து ஆலோசித்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப்பில் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்கு உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1.84 லட்சமாக (1,84,523) உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.65 சதவீதம்.

இன்று காலை 7 மணி வரை  2 கோடிக்கும் அதிகமான (2,09,22,344) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளனஇவர்களில் 69,82,637 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரப் பணியாளர்கள், 35,42,123 பேர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரப் பணியாளர்கள்,  65,85,752  பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்களப் பணியாளர்கள்,  2,11,918 பேர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்களப் பணியாளர்கள்.  4,76,041 பேர்,  45 வயதுக்கு  மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள். 31,23,873 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

50வது நாளான நேற்று 14 லட்சத்துக்கும்  மேற்பட்டோர் (14,24,693) தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர், கொவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1702981

----- 


(Release ID: 1702996) Visitor Counter : 243