மத்திய அமைச்சரவை

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா, பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 03 MAR 2021 12:59PM by PIB Chennai

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவும், பிரான்சும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், 2021 ஜனவரி மாதம் கையெழுத்தானது.

பரஸ்பர ஒத்துழைப்பு, சமத்துவம், பயன்களைப் பரிமாறிக் கொள்வதன் அடிப்படையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிப்பதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். சூரிய மின்சக்தி, காற்றாலை, ஹைட்ரஜன், உயிரி எரிசக்தி தொடர்பான தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக:

•             அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சியும், அவர்களது பரிமாற்றமும் ஏற்படும்

•             அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களும், தரவுகளும் பரிமாறிக் கொள்ளப்படும்

•             பயிலரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்களுக்கு ஏற்பாடு; உபகரணங்கள், செயல்முறை மற்றும் தொழில்நுட்பங்கள் பரிமாறப்படும்

•             கூட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் திட்டங்கள் மேம்படுத்தப்படும்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தொழில்நுட்பப் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவியாக இருக்கும். இதன்மூலம் 2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை உருவாக்கும் இலக்கை அடைய முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1702152

****************


(Release ID: 1702256) Visitor Counter : 270