சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.34 கோடியை கடந்து விட்டது

प्रविष्टि तिथि: 26 FEB 2021 10:40AM by PIB Chennai

இந்தியாவில் கொவிட் 19 தடுப்பூசி போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.34 கோடியை தாண்டிவிட்டது.

இன்று காலை 7 மணி வரை, 1,34,72,643 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர்களில் 66,21,418 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 20,32,994  பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசியும், முன்களப் பணியாளர்களில் 48,18,231 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

41ம் நாளான நேற்று, 8,01,480 தடுப்பூசிகள் போடப்பட்டன.

இந்தியாவில் கொவிட்  சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,55,986-ஆக உள்ளது. ஆனால், 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,000-க்கும் குறைவாக உள்ளது.

20 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், கடந்த 24 மணி நேரத்தில்  கொவிட் 19 உயிரிழப்பு ஏற்படவில்லை.

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 1,07,50,680ஆக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 97.17 சதவீதம்.  கடந்த 24 மணி நேரத்தில், 12, 179 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 16,577 பேருக்கு புதிதாக கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 8,702 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக கேரளாவில் 3,677 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொவிட் தொற்று காரணமாக 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1700983&RegID=3&LID=1

*****************


(रिलीज़ आईडी: 1701049) आगंतुक पटल : 241
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu