சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தமிழகம், கேரளா உட்பட 7 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரிப்பு
Posted On:
25 FEB 2021 12:12PM by PIB Chennai
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 1,51,708-ஐ கடந்தது. இது மொத்த பாதிப்பில் 1.37 சதவீதம்.
மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், தமிழகம், குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 16,738 பேருக்கு புதிதாக கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 89.57 சதவீதம் பேர் 7 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 8,807 பேருக்கும், அடுத்ததாக கேரளாவில் 4,106 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தினசரி பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணத்தை கண்டறியவும், மாநில சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தவும், 7 மாநிலங்களுக்கு உயர்நிலை ஒழுங்கு குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
மறுபுறம், நாட்டின் ஒட்டு மொத்த கொவிட் பாதிப்பு குறைந்து வருகிறது. 2021 பிப்ரவரி 25ம் தேதி, நிலவரப்படி ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5.17 சதவீதமாக உள்ளது.
இன்று காலை 7 மணி வரை 1,26,71,163 கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இவற்றில் , 1,10,54,815 தடுப்பூசிகளை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் முதல் டோஸாக போட்டுள்ளனர்.
மொத்தம் 16,16,348 சுகாதாரப் பணியாளர்கள், 2வது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.
40ம் நாளான நேற்று, 5,03,947 கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டன.
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 1,07,38,501 ஆக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 97.21 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,799 பேர் குணமடைந்துள்ளனர்.
(Release ID: 1700803)
Visitor Counter : 259