எரிசக்தி அமைச்சகம்

‘மின் எரிபொருளுக்கு’ மாறும் பிரச்சாரத்தை தொடங்கினார் மத்திய போக்குவரத்து அமைச்சர் திரு. நிதின் கட்கரி

Posted On: 19 FEB 2021 3:49PM by PIB Chennai

மின்சார வாகனம், பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு, மின் அடுப்புகள் மூலம் சமையல் செய்வது போன்றவற்றின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தமின்சாரத்துக்கு மாறுவோம்பிரச்சாரத்தை, மத்திய மின்துறை இணையமைச்சர் திரு.ஆர்.கே.சிங் முன்னிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுங்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

பெட்ரோலிய எரிபொருள் இறக்குமதி செலவு ரூ.8 லட்சம் கோடியாக உள்ளது. இதற்கு மாற்று, மின்சார எரிபொருள். வழக்கமான எரிபொருளுடன் ஒப்பிடுகையில் மின்சார எரி பொருள் விலை மலிவானது. காற்று மாசும் குறைகிறது.

மின்சாரம் உள்நாட்டில் தயார் செய்யப்படுகிறது.

பொது போக்குவரத்தை மின்மயமாக்குவது மலிவானது மட்டும் அல்ல, சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது. வேளாண் கழிவில் இருந்து பசுமை மின்சாரம் உற்பத்தி செய்வதை மின்துறை அமைச்சகம் ஊக்குவிக்க வேண்டும்.

இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயனடைவர்.

வரும் ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதியை குறைப்பதற்கு, சுத்தமான எரிசக்திக்கு மாறமின்சாரத்துக்கு மாறுவோம்பிரச்சாரம் முக்கியமான முயற்சி.

இந்த பிரச்சாரம் மின்சார வாகனங்கள் துறைக்கு நம்பிக்கையை அதிகரிக்கும்.

இவ்வாறு அமைச்சர் திரு. நிதின் கட்கரி பேசினார்.

மத்திய அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் பேசுகையில், ‘‘குறைந்த கார்பன் பொருளாதாரத்தை நோக்கி செல்லும் எரிசக்தி மாற்றத்தை நிறைவேற்றுவதில் இந்த பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும். அப்போதுதான் பருநிலை மாற்ற பாதிப்பில் இருந்து நமது பூமியை பாதுகாக்க முடியும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் மின் எரிபொருளுக்கு மாறும் லோகோ வெளியிடப்பட்டது. விழிப்புணர்வு வீடியோவும் வெளியிடப்பட்டதுமின்சார பேருந்து, கார்கள், இரு சக்கர வாகனங்கள் குறித்த கண்காட்சியும் நடத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699386

-----

 (Release ID: 1699480) Visitor Counter : 303