உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
ரூ.363.4 கோடி செலவிலான உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்களுக்கு அனுமதி
Posted On:
17 FEB 2021 11:44AM by PIB Chennai
ரூ.363.4 கோடி செலவிலான உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்களுக்கு மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் அனுமதி வழங்கினார்.
பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தின் கீழ் வேளாண் பொருட்கள் பதப்படுத்தும் கட்டமைப்பு தொகுப்பு, (Agro-Processing Cluster (APC)
உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல் /விரிவு படுத்துதல் ( Creation / Expansion of Food Processing and Preservation Capacities (CEFPPC) ஆகிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் இரண்டு குழுக்களின் ஆலோசனை கூட்டத்துக்கும் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் காணொலி காட்சி மூலம் நேற்று தலைமை தாங்கினார்.
இத்துறை இணையமைச்சர் திரு. ராமேஷ்வர் தேலி மற்றும் இத்திட்டத்தை செயல்படுத்துபவர்களும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல் /விரிவு படுத்துதல் திட்டத்தின் கீழ் இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, மிசோரம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் ரூ.36.30 கோடி மதிப்பிலான மானிய உதவி திட்டங்கள் உட்பட ரூ.113.08 கோடி செலவில் 11 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த திட்டங்கள் ரூ.76.78 கோடி அளவுக்கு தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும். இதன் மூலம் 3,700 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், 6,800 விவசாயிகள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை பதப்படுத்தும் அளவை அதிகரித்து, வேளாண் பொருட்கள் வீணாவதை குறைக்கும்.
வேளாண் பொருட்கள் பதப்படுத்தும் கட்டமைப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, அருணாச்சலப் பிரதேசம், அசாம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ரூ.66.61 கோடி மானிய உதவிகள் உட்பட மொத்தம் 250.32 கோடி செலவிலான 9 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த திட்டங்கள் ரூ.183.71 கோடி அளவிலான முதலீட்டை அதிகரிக்கும். இதன் மூலம் 8,260 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும், 36,000 விவசாயிகள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்புதல்கள் மூலம் உணவு பதப்படுத்துதல் அதிகரித்து, விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698609
-----
(Release ID: 1698747)
Visitor Counter : 207