பாதுகாப்பு அமைச்சகம்

62 கண்டோன்மெண்ட் வாரிய குடியிருப்புகளில் வசிப்போருக்கு ஆன்லைன் சேவைகளுக்கான இணையதளம், செயலி : பாதுகாப்பு அமைச்சர் துவக்கம்

Posted On: 16 FEB 2021 2:08PM by PIB Chennai

-சவானி இணையதளத்தையும், செயலியையும் இன்று புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள 62 கண்டோன்மெண்ட் வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு ஆன்லைன் மூலம் உள்ளாட்சி சேவைகளை வழங்குவதற்காக இந்த இணையதளம் (https://echhawani.gov.in/) உருவாக்கப்பட்டுள்ளது.

குத்தகைகளைப் புதுப்பித்தல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல், தண்ணீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள், வர்த்தக உரிமங்கள், நடமாடும் கழிப்பறைகளை கண்டறிதல், பல்வேறு வகையான வரிகள் மற்றும் கட்டணங்களை செலுத்துதல் ஆகியவற்றை தற்போது மிகவும் எளிதாக இத்தளத்தின் மூலம் செய்ய முடியும்.

-கவ் அறக்கட்டளை, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்), ராணுவ எஸ்டேட்களின் தலைமை இயக்குநரகம், தேசிய தகவல் மையம் ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தளத்தின் மூலம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே சேவைகளைப் பெற முடியும்.

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர், மக்களுக்கு அதிகபட்ச சேவைகளை வழங்குவதன் மூலமும், நிர்வாகத்தை செயல்திறன் மிக்கதாகவும், வெளிப்படையானதாகவும் ஆக்குவதன் மூலமும் நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அரசின் உறுதியை மீண்டுமொருமுறை வலியுறுத்தினார்.

அரசு அமைப்பை மக்களுக்கு நட்பானதாக ஆக்கவும், ‘வாழ்வை எளிதாக்குதல்மற்றும்செயல்களை எளிதாக்குதல்ஆகியவற்றை செயல்படுத்தவும் அரசு பாடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

கண்டோன்மெண்ட் வாரியங்களின் செயல்பாடுகளை மாற்றியமைப்பதற்கான புதுமையான முயற்சி என்று -சவானி தளத்தை வர்ணித்த திரு ராஜ்நாத் சிங், ‘புதிய இந்தியாலட்சியத்தை சார்ந்து இது உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்தத் தளத்தின் மூலம் கண்டோன்மெண்ட் வாரியங்களின் சேவைகள் வழங்கும் முறை செயல்திறன் மிக்கதாகவும், வெளிப்படையானதாகவுமாகி, குறிப்பிட்ட நேரத்தில் மக்களுக்கு சேவைகளை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

*********



(Release ID: 1698484) Visitor Counter : 225