பிரதமர் அலுவலகம்

மகாராஷ்டிரா ஜல்கானில் ஏற்பட்ட சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 15 FEB 2021 10:33AM by PIB Chennai

மகாராஷ்டிராவின் ஜல்கானில் ஏற்பட்ட சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுட்டுரைச் செய்தியில், “மகாராஷ்டிராவின் ஜல்கானில் நிகழ்ந்த லாரி விபத்து ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

************


(வெளியீட்டு அடையாள எண்: 1698097) வருகையாளர் எண்ணிக்கை : 201